Menu
Your Cart

பொன்னியின் செல்வன் - விகடன்

பொன்னியின் செல்வன் - விகடன்
Hot -10 %
பொன்னியின் செல்வன் - விகடன்
கல்கி (ஆசிரியர்)
₹1,800
₹2,000
FREE shipping* (within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

பொன்னியின் செல்வன் - கல்கி:

  • அமரர் கல்கி பற்றியோ, அவரின் எழுத்தாற்றல் பற்றியோ தமிழ்கூறும் நல்லுலகுக்கு புதிதாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. அவருடைய படைப்பின் மகிமை அத்தகையது. அவரின் சரித்திரக் காப்பியங்களான பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம், பொன்னியின் செல்வன் போன்றவை காலத்தால் அழியாத காவியங்களாக போற்றப்படுபவை. இன்னும் எத்தனை நூறாண்டு காலத்துக்குப் பிறகு அவற்றை எடுத்துப் படித்தாலும், அமரர் கல்கியின் மயக்கும் நடையும், எளிமையும் இனிமையும் நிரம்பிய தமிழும், கதையின் வசீகரப் போக்கும் ஓர் இனிய சுழலுக்குள் நம்மை இழுத்துப் போவதை உணரலாம். சரித்திரத்தையும் கற்பனையையும் மிகத் திறமையாகக் குழைத்து அமரர் கல்கி படைத்திருக்கும் புதினமான ‘பொன்னியின் செல்வன்’, தமிழ் வாசகர்களுக்குக் கிடைத்த ஓர் இலக்கிய வரம் என்றே சொல்லலாம். பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய சரித்திரக் காட்சிகளை - அவற்றுக்கான அடிப்படை ஆதாரங்களை அச்சு பிசகாமல் உள்வாங்கிக் கொண்டு & அருகில் இருந்தே பார்த்தது போல நுணுக்கமாக அவர் விவரித்திருக்கும் நேர்த்தியை என்னவென்று சொல்ல! சுந்தரச் சோழர், அருள்மொழி வர்மன், ஆதித்த கரிகாலன், வந்தியத்தேவன், செம்பியன்மாதேவி, குந்தவை, வானதி, நந்தினி, ஆழ்வார்க்கடியான், பழுவேட்டரையர் என வரிசையாக ஒவ்வொருவரும் உயிர்பெற்று நம் முன் நடமாடத் துவங்குகிறார்கள். அன்றைய சோழ தேசத்தில் நிலவிய ராஜாங்கப் பிரச்னைகள், வகுக்கப்பட்ட யுத்த வியூகங்கள், தீட்டப்பட்ட சதியாலோசனைகள் ஆகியவை ஒரு மர்ம நாவலுக்குரிய அத்தனை படபடப்பையும் ஏற்படுத்தி விடுகிறது. இதில் எவையெல்லாம் நிஜ சரித்திரம், எவையெல்லாம் சரித்திரத்தின் நீட்சியாக உருவாக்கப்பட்ட கற்பனைச் சம்பவங்கள் எனப் பிரித்தறிய முடியாதபடி பின்னிப் பிணைந்து இருப்பது, அமரர் கல்கியின் ஜீவிய எழுத்துத் திறனுக்குச் சான்று! ஒலியும் ஒளியும் போல...
  • எழுத்தின் பிரமாண்டத்தையும் பிரமிப்பையும் துளிகூட விட்டுக்கொடுக்காமல் உயர்த்திப் பிடிக்கும் ஓவியங்களைத் தந்தவர் அமரர் மணியம். இந்த ஓவியங்களை இத்தனை ஆண்டு காலமும் பொத்திப் பாதுகாத்து விகடன் பிரசுரத்துக்கென மெருகு குலையாமல் ஒப்படைத்திருக்கிறார் மணியம் அவ ர்களின் புதல்வர் & ஓவியர் மருது தந்தை மீது கொண்ட பற்று, கலை மீது கொண்ட ஆர்வம் ஆகியவை மட்டுமின்றி... ஒரு பொக்கிஷத்தைக் காப்பாற்றித் தருகின்ற பொறுப்பு உணர்வின் மிகுதியையும் ம.செ&விடத்தில் கண்டு வியக்கிறோம். ஐந்து பாகங்களாக இதைத் தொகுத்து வழங்கும் எண்ணத்தைச் சொன்னபோது, அமரர் கல்கி அவர்களின் புதல்வர் கல்கி கி.ராஜேந்திரன் அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளில் வெளியிட முடியாது. நெகிழ்ச்சியின் உச்சத்தில், இந்தப் பணிக்குத் தமது ஆசிகளை அளித்து தெ£குப்பின் சிறப்பைக் கூட்டியிருக்கிறார். பேனா மன்னரின் வாரிசுக்கும், தூரிகை மன்னரின் வாரிசுக்கும் மனமார நன்றி சொல்லி... வாருங்கள், சரித்திரத்தை புத்தம் புதிதாகப் புரட்டிப் பார்ப்போம்.
Book Details
Book Title பொன்னியின் செல்வன் - விகடன் (Ponniyin Selvan 5 Parts with pictures)
Author கல்கி (Kalki)
Publisher விகடன் பிரசுரம் (Vikatan Prasuram)
Pages 2120
Year 2022
Edition 20
Format Hard Bound
Category Novel | நாவல், Historical Novels | சரித்திர நாவல்கள், Classics | கிளாசிக்ஸ்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha